பேரையூர் அரசு மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மய்யமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கமுதிக்கு சென்று தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இனி பேரையூர் பள்ளியிலேயே எழுதலாம்.
ஒவ்வொரு வருடமும் கமுதிக்கு தேர்வு எழுத செல்லும்போதும் சாதி இந்துக்களால் நம் தேவேந்திர மாணவர்களும் மாணவியரும் தாக்காப்படுவது வழக்கமாக இருந்தது. கலந்த இரண்டு ஆண்டுகளாக காவல் துறையின் உதவியோடு பேருந்தில் சென்று தேர்வு எழுதினார்கள். எனவே பேரையூர் பள்ளியிலேயே தேர்வு மையம் வேண்டும் என்று மாணவர்கள் குறிப்பாக மாணவியர் விரும்பினர். பல போராட்டங்களுக்கு பிறகு பேரையூர் அரசு மேல்நிலை பள்ளி இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இதற்காக போராடிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த அறிவிப்பின் காரணமாக மகிழ்ச்சியடைந்து உள்ளனர். புதிய ஊராட்சி மன்றத் தலைவரும் துணைத்தலைவரும் பெரும் முயற்சிஎடுத்து இந்த சாதனையை செய்துள்ளனர். பல மூத்த அரசியல்வாதிகளின் முட்டுக்கட்டைகளை தகர்த்து, மக்களின் பேராதரவுடன் இந்த நல்ல விசயத்தை செய்துமுடித்த புதிய ஊராட்சி மன்றத் தலைவர் வேலு அவர்களையும் துணைத்தலைவர் ரூபி கேசவன் அவர்களையும் மக்கள் பாராட்டுகின்றனர்.