மதுரையில் மாவீரன் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை உடைப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான செப்டம்பர் 11-ம் தேதி ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்கள் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுபோல் நெல்லை மாவட்ட மள்ளர் இலக்கிய கழகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில், இம்மானுவேல் சிலை இருந்த அதே இடத்தில் மீண்டும் வெண்கல சிலை அமைத்திடவும், சிலையை உடைத்த விசமிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திடவும் தவறினால் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized | Leave a comment

மதுரை விமான நிலையத்திற்கு மாவீரன் இமானுவேல் பெயர் வைக்க கோரிக்கை

கரூர் பஸ் நிலையம் அருகில் கரூர் மாவட்ட தேவேந்திரர் கூட்டமைப்பு சார்பில் சமூக உரிமைப் போராளி தியாகி இமானுவேல் பெயரை வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார். அம்பேத்கார் சேவை கூட்டமைப்பு பேரவை தலைவர் பெ.கருணாகரன், தலித் விடுதலை  இயக்க மாநில இளைஞரணி செயலாளர் தலித் பாண்டியன், மள்ளர் மீட்புக் கழகம் தமிழ் நெஞ்சன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் பாண்டியன் பேசுகையில், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரைத் தான் வைக்க வேண்டும். ஆனால் மதுரை எம்.பி.யும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வைக்க பரிந்துரை செய்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் வரும் சட்ட மன்றத் தேர்தலில் தேவேந்திர மக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இது தகவல் அல்ல எச்சரிக்கை என்றார்.

Posted in Uncategorized | Leave a comment

உமாசங்கர் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் சமூகத்தின் பலவீனமே!

உயிரான சமூக உறவுகளுக்கும், மக்கள் நேசிப்பாளர்களுக்கும்…

1995-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மதுரையில் திரு. உமாசங்கர் அவர்கள் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த போது, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வ கணபதிக்கு எதிராக சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது திரு. உமாசங்கரின் நேர்மையை பாராட்டியவர்களில் கருணாநிதியும் ஒருவர். இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 1995ம் ஆண்டு அக்டோபரில் திரு. உமாசங்கர் தெற்காசிய இயக்குனராக பணிமாற்றம் செய்யப்ட்டு பழிவாங்கப்பட்டார். இதே 1995ம் ஆண்டில் தான் கொடியன்குளம் அடகுமுறையை ஜெயலலிதா அரசு தேவேந்திரர்கள் மீது ஏவி விட்டது. கொடியன்குளம் கலவரத்தால் கொதித்தெழுந்த தென்மாவட்ட தேவேந்திரர்கள் அ.தி.மு.க மீது வெறுப்படைந்து 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க வை ஆதரித்து வாக்களித்தனர்.

பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க திரு. உமாசங்கர் அவர்களை அக்டோபர், 1999ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்தது. திரு. உமா சங்கர் அவர்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தில் இருந்த அதீத திறமையால் நாடே வியக்கும் வண்ணம் முதன் முதலில் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை கணிணி மயப்படுத்தி அரசிற்கு பெருமை சேர்த்தார். பல்வேறு பதவிகளுக்குப் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் எல்காட் நிறுவனத்தின் நிரவாக இயக்குனராக பணியமர்ப்படுகிறார். அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனம், தனியார் நிறுவனமான நெட் என்பதுடன் கூட்டு நேர்ந்து எல்நெட் எனும் கூட்டு நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இதில் எல்காட் நிறுவனத்தின் பங்கு 26%, தனியார் நிறுவனமான நெட் நிறுவனத்தின் பங்கு 24% மீதம் பொதுமக்களுடையது. கூட்டு நிறுவனமான எல்நெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டுமானால் அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் ஒப்புதல் வாங்கவேண்டும்.

ஆனால் திரு. உமாசங்கர் அவர்கள் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான நெட் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராச செட்டியார் எல்காட் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலே எல்நெட் நிறுவனத்தின் சொத்தைக்காட்டி எல்நெட்டில் பங்குதாரராக இருக்கும் தமது மனைவி பெயரில் தியாகராச செட்டியார் வங்கியில் 81 கோடி கடன் வாங்கியிருப்பதை கண்டுபிடித்து அதை பிரச்சனையாக்கியதோடு மட்டுமல்லாமல் சி.பி. விசாரணை நடத்த வலியுறுத்தி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். பின்னர் எல்நெட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த தியாகராச செட்டியாரின் மனைவியை பங்குதாரரில் இருந்து விடுவிக்க சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி சுற்றரிக்கை அனுப்பப்படுகிறது. உடனே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து உமாசங்கர் நீக்கப்பட்டு TIIC க்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்.

இந்த நேரத்தில் தான் கலாநிதிமாறன் சகோதர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையில் விரிசல் ஏற்படுகிறது. மாறன் சகோதரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தினகரன் நாழிதழ் அடுத்த முதல்வர் பதவிக்கு யாருக்கு ஆதரவு அதிகம் (ஸ்டாலின்-மு.க.அழகிரி) என வெளியிட்ட கருத்துகணிப்பில் மு.க.அழகிரிக்கு மிகக் குறைந்த சதவீதம் ஆதரவு என கருத்து வெளியிட்ட போது மதுரை தினகரன் அலுவலகம் அடித்து, நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதில் அப்பாவி தொழிலாளர்கள் மூன்று பேர் உயிர் இழந்தனர். அந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரு. உமாசங்கர் அவர்களை தொலைபேசியில் அழைத்துப்பேசி பின்னர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு மாறன் சகோதர்களுக்கு எதிராக அரசு கேபிள் டி.வியை வளர்த்தெடுக்க எண்ணுகிறார்.

பின்னர் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை பலப்படுத்த திரு. உமாசங்கர் எடுத்த முயற்சியில் மாறன் சகோதரர்கள் பெரும் தடை ஏற்படுத்தி இடஞ்சல் செய்கிறார்கள். இதனால் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விசனை தேசியமயமாக்க பரிந்துரை செய்யப்படுகிறது. பின்னர் The Preventive Detention Laws and for Action Under the Penal Laws- எனும் சட்டத்தின் கீழ் பெரும் முதலாளியான மாறன் சகோதர்களை கைது செய்ய துணிச்சலாக பரிந்துரையும் செய்கிறார்.

பின்னர் சிறு இடைவெளி காலத்திற்கு பின்பு கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட இணக்கமான உறவால் திரு. உமாசங்கர் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு சிறு சேமிப்புத்துறை ஆணையராக பணிமாற்றம் செய்யப்படுகிறார். இவ்வேளையில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கிடப்பிலே போடப்படுகிறது. இருப்பினும் மாறன் சகோதரர்களின் அடங்காத கோபம் தொடர்ந்து திரு. உமாசங்கர் அவர்களை பழிவாங்க துடித்து திரு உமாசங்கர் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது துணைவியார் சூர்யகலாவுக்கு Tessolve எனும் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கியிருப்பதாக குற்றம் சாட்டி தொல்லைப்படுத்தினார். பின்னர் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டி சோதனை எனும் பெயரில் திரு. உமாசங்கர் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். இறுதியில் திரு. உமாசங்கர் சாதி சான்றிதழில் முறையீடு செய்துள்ளார் என குற்றம் சாட்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்பது தான் தமிழர் விடுதலைப்புலிகளின் அறப்போராட்டத்திற்கான சாரம்.

கடந்த நாட்களில் மதுரையில் நடந்த SC/ST அரசு ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் உமாசங்கர் எனும் IAS அதிகாரிக்கே இந்த நிலை என்றால் நமக்கும் ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு. ஆகவே நாம் போராட அணியமாக வேண்டும் எனச் சொல்லி உயர் அதிகாரிக்கே என மிகைப்படுத்தி, சமூக பலவீனம் தான் இதற்கெல்லாம் காரணம் எனும் யதார்த்த உண்மையை பின்தள்ளுகின்றனர். சமூகம் பலமாக இருந்தால் திரு. உமாசங்கர் அவர்களை பணி இடைநீக்கம் செய்வதற்கும், தேவேந்திரனை சீண்டிப்பார்ப்பதற்கும் நிஜமாகவே தி.மு.க அரசு அஞ்சியிருக்கும்.

நம்மில் உயர் அதிகாரி ஆன பின்போ, அல்லது அரசு பதவிகளுக்கு சென்ற பின்பும் கூட நாம் ஒவ்வொருவரும் தேவேந்திரகுல வேளாளர் சாதியின் ஒரு அங்கம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இன்று பெரும் சவாலாக விளங்கும் சாதியச் சமூகத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் தான் சார்ந்த சாதியின் பலம், பலவீனம் தான் தனிநபரின் பாதுகாப்பையும், ஆபத்தையும் கூட தீர்மானிக்கும்.

நாம் சார்ந்த தேவேந்திரர் சமூகம் இன்று பலவீனமாக இருப்பதுதான் உத்தபுரம் வேவேந்திரர் மீதான அடக்குமுறையிலிருந்து, திரு. உமாசங்கர் IAS மீதான ஒடுக்குமுறைக்கு காரணம். ஆகவே சமூகத்தை பலப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்ந்து ஒட்டுமொத்த தேவேந்திர மக்களையும் முதலில் சமூகமாக மாற்றவேண்டும். அதற்கான வேலைத் திட்டத்தோடு பொதுவாழ்வில் களம் இறங்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் செய்கின்ற சமூக பணிகளெல்லாம் சமூகத்திற்கு நன்மையே எனக்கருதாமல் நாம் சமுக எதார்த்தத்தை புரிந்த கொண்டு செய்யவேண்டிய வேலையெதுவோ அதை மட்டும் தான் சமூக நம்மை எனச் சொல்லி அறப்போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். ஆதரவு தாருங்கள் என அறைக்கூவல் இட்டு அழைக்கின்றோம்.

Posted in Uncategorized | Comments Off

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.சஸ்பெண்ட் – தேவேந்திரர் மீது தி.மு.க. அரசு போர்

மருதமலர் ஆகஸ்டு 2010 இதழிலிருந்து….

திராவிட கட்சிகள் காலத்துக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு என்று மிகப்பெரிய மரியாதை இருந்தது. பின்னர் அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் நபர்களாக அவர்கள் மாறிப்போயினர். எனினும், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் மீறி ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கான மிடுக்கை காட்டியவர்கள் திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்திலும் உண்டு. அதற்கு 1970களில் நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் கலெக்டராக இருந்த சுந்தரம், சேரன்மாதேவி துணை கலெக்டராக இருந்த சந்திரலேகா என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றி குர்னிகால் சிங், ஸ்வரண்சிங் போன்ற அதிகாரிகளையும் கூறலாம்.

அதேபோல் 1990களில் ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டவர் உமாசங்கர். இவர் 1990ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். 1995-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மதுரையில் சுடுகாட்ட கொட்டகை அமைக்கப்பட்டது. அதில் ஊழல் நடைபெற்றதை வெளிக்கொண்டு வந்தவர். அபபோது கூடுதல் கலெக்டராக உமாசங்கர் பதவி வகித்தார். சுடுகாட்டு ஊழலை அம்பலப்படுத்தியதால் இவரின் பெயர் பத்திரிகைகளில் பரபரப்பாய் இடம்பெற்றது. இவரின் பணிக்கு பாராட்டுகளும் குவிந்தன. இதைத்தொடர்ந்து 1996-ல் தி.மு.க. ஆட்சி அமைக்கப்பட்டபோது, ஜெயலிலிதா மற்றும் முந்தைய ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த செல்வ கணபதி ஆகியோர்மீது வழக்கு தொடரப்பட்டது. தி.முக. ஆட்சிக்கு வந்ததும் இணை கண்காணிப்பு ஆணையாளராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின்னர், முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூரின் கலெக்டராகவும் பதவி வகித்தார். திருவாரூரில் மின்ஆளுமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, மின் ஆளுமையில் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக மாற்றி காட்டினார்.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, அவர் எல்கர்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனத்தில் பணிகளில் ஒன்று இலவச கலர் டி.வி. வழங்குவதாகும். அதன்பிறகு 2008-ல் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல்வர் டாக்டர் கலைஞர் குடும்பத்துக்கும், மறைந்த மத்திய அமைச்சர முரசொலி மாறனின் குடும்ப வாரிசுகளுக்கும் இடையே டி.வி.சேனல் பிரச்சினை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு செக் வைக்கவே உமா சங்கருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. அந்த பதவியில் இருந்த உமாசங்கர் சன் நிறுவனத்துக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கை தேசியமயமாக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைந்ததிருந்தார். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் சிறுசேமிப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் உமாசங்கர். அந்த மனுவில், நான் ஒரு தனியார் கேபிள் டி.வி.வை தேசியமயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததும், ஒரு மத்திய மந்திரி மீது நடவடிக்டிக எடுக்க வேண்டும் என்று சொன்னதுமே இதுபோன்ற நிலை ஏற்பட காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 21ம் தேதி இரவு உமாசங்கரை தமிழக அரசு திடீரென்று சஸ்பெண்டு செய்தது. இதற்கான உத்தரவு, அவரது வீட்டில் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் வகிந்து வந்த சிறுசேமிப்பு இயக்குனர் பதவிக்கு, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோகன்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உமாசங்கர் சஸ்பெண்டு விவகாரம் பற்றி தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகையில், யு.பி.எஸ்.சி. (ஐ.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவதற்காக உமாசங்கர் சமர்பித்த சாதி சான்றிதழில், சலுகை பெறுவதற்காக, தலித் கிறிஸ்தவரான அவர், தலித் (இந்து) என்று அதில் மாற்றி குறிப்பிட்டுள்ளார். அதற்கான போதிய ஆதாரம் அரசிடம் உள்ளது. இதன் அடிப்படையில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் தந்தமை பற்றியும, சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும் யு.பி.எஸ்.சி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

உமாசங்கரை சஸ்பெண்ட செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கும் காரணத்தை பார்க்கும்போது அவர் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருக்கிறார். தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்று கலைஞர் விடுத்த கோரிக்கை சும்மா அரசியல் காரணங்களுக்கானது என்பது இந்த சஸ்பெண்ட் மூலம் தெரியவருகிறது. அவர்மீது அரசு சொன்ன வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் வலுவில்லாததால் ஜாதிச் சான்றிதழ் என்ற துருப்புசீட்டை வைத்து கலைஞர் ஆட்டம் காட்டுகிறார். மேலும், இநத் ஜாதி சான்றிதழ் விபரம் இதற்கு முன்னர் அரசுக்கு தெரியாதா?

சுடுகாட்டு ஊழலில் சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி இப்போது தி.மு.க.வில் இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் தான் ராஜ்யசமா எம்.பி. பதவியை தங்க தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்திருக்கிறார் கலைஞர். இதன்மூலம் ஊழலுக்கு எதிரானவர் கருணாநிதி என்ற உண்மையும் அடிபட்டு போகிறது. கேபிள் டி.வி. சேனல் விவகாரத்துக்குள் கலைஞரின் குடும்பத் தொழில் சிக்கி இருப்பதாலும், அதில் உள்ள பல ரகசியங்களை உமாசங்கர் அம்பலப்படுத்தியது தான் அவர் மீதான கோபத்துக்கான காரணம் என்பது கலைஞரின் நடவடிக்கை மூலம் தெளிவாகிறது.

சுடுகாட்டு ஊழலை அம்பலப்படுத்தியதற்காக 2001ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கூட உமாசங்கர் மீது ஜெயலலிதா சஸ்பெண்ட் என்ற அஸ்திரத்தை ஏவவில்லை. ஆனால், கருணாநிதி ஏவி இருக்கிறார். இதன்மூலம் தேவேந்திர சமுதாயம் மீது கருணாநிதி தன் மனதுக்குள் எவ்வளவு உச்சபட்ச வெறுப்பில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது, தேவேந்திரர்களே, கடந்த சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் கருணாநிதிக்கு நாம் போட்ட ஓட்டுகளுக்கு பரிசுதான் உமாசங்கர் சஸ்பெண்ட். எனவே நாம் ஒன்றுதிரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவது கட்டாயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized | Comments Off

புறநானூற்றில் மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…

மள்ளர் குலத்தாரைத் தலைமக்களாகவும், படை மறவராகவும், மன்னர்களாகவும், இறைவனாகவும் காடடும் சங்க காலத் தமிழ் இலக்கயிங்களில் புறநானூற்றில் மள்ளர் – மல்லர் மரபினர் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பற்றி இங்கே காண்போம்.

பண்டையத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மள்ளர் குலப் பேரரசர்களையும், சிற்றரசர்களையும் மள்ளர் குலப் போர் மறவர்களையும், வீர வழிபாட்டு முறைகளையும் புறநாநூறு பறைசாற்றுகிறது.

புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பேரரசர்கள் யாவரும் மள்ளர்-மல்லர் மரபினரான பள்ளர் என்றாலும் மள்ளர், மல்லர் என்ற சொற்கள் வருமூ பாடல்களையும் இங்கே காண்போம்.

செய்யுள் 10

சோழன் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது

“மள்ளர் மலைத்தல் போகிய மார்பன்
வழிபடுவோலைர வல் அறிதீயே,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்.
ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே -
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல், நெடியோய்! –
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!”

பொருள்

நெய்தலங்கனால் என்ற ஊரை வென்ற புகழ்மிக்க மள்ளர் சோழன் இளஞ்சேட் சென்னியே! உன்னை வழிபடுவோரைத் தீர அறியும் குணமுடையோனே! பிறர் மீது பழி சொல்வோரின் பேச்சை நம்பமாட்டாய், தீயவை செய்தவர் என்று ஆராய்ந்து அறிந்தால் அத்தீயவர்களுக்கு உரிய தண்டை வழங்கத் தவறமாட்டாய். அத்தீயவன் தன் தவற்றை உணர்ந்து உன்னைப் பணிந்து மன்னிப்புக் கேட்டல், அவனை மன்னித்து முன்னை விட அவன் மிது அன்பு செலுத்துவாய். உண்ண, உண்ண மேலும் ஆவல் கொள்ளும் அமிர்தம் போன்ற நல்லுணவை வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் வசைச் சொல் கோளாத வாழ்வு உடையவன். நின் தேவியர் மள்ளத்தியரைத் தழுவி இன்பம் அடைதல் அல்லாது பகை மள்ள அரசர் தொடாத மாலையணிந்த வலிமையான மார்பை உடைய மள்ளன் நீ, எந்தக் காரியத்தையும் நிதானமாகத் தவறில்லாமல், செம்மையுடன் செய்து, நின் புகழ் பரவி வாழுகின்ற சோழனே, உன் புகழ் மிக்க பண்புகளை முழுவதும் பாராட்டிப் போன்றுகின்றோம்.

செய்யுள் 77

இயற்றிய புலவர் இடைக்குன்றூர் கிழார்

“கூடி எதிர்த்து வந்த வம்ப மள்ளரைப் புகழவோ, இகழவோ இல்லை.

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார் கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,
தா‘லி களைந்ததன்றும் இவனே; பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும், இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இவனே”.

பொருள்

சலங்கைகள் கழற்றப்பட்டு வீரக் கழல்களை அணிந்த கால்களையும், விரித்து முடியப்பட்ட குடுமியில் வேப்பம் பூங்கொத்தும், உழிஞைக் கொடியும் சூடி, வளையல்கள் இல்லாத கைகளிலே வில்லைப் பிடித்து நெடிய தேரில் விளங்கி நிற்கும் அவன் யாரோ? அவன் கண்ணி வாழ்வதாக. தாமரையணிந்து ஐம்படைத் தாலியைக் களையாமல் இருக்கிறான். பாலை விட்டு இன்று உணவு உண்டான். அலை அலையாய் தன்னை எதிர்த்துப் போர் செய்ய வந்த வம்ப மள்ளரான இருபெரும் வேந்தர்களையும் ஐம்பெரும் வேளிரையும் மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன். தன்னை எதிர்த்து வந்த அவரை இறுகப் பிடித்து பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலும் நிலத்தின் கண்ணே பொருந்துமாறு வீழ்த்தியதற்கு மகிழ்ந்ததும், இவ்வாறு செய்தோமென்று தற்பெருமை பேசிக் கொண்டதுவும் இலன்.

செய்யுள் 78

பாண்டியன் தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எள்ளி வந்த வம்ப மள்ளர்,
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாடள,
அணங்கு அருங்கடுந் திறல் என்னை முணங்கு
நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தென்ன
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து,
விழுமயம், பெரியம், யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
மான் இழை மகளில் மாணினர் கழிய,
தந்தை தம் ஊர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே”.

பொருள்

தீரமும், வீரமும் உள்ள எம் இறைவன் (மன்னன்) வலிமையும் வேகமும் மிக்க கால்களை உடையவன். நீரைக் கலக்கிக் கொண்டு, உழுவை மீன் தன் இரைரைய மின்னலெனச் சென்று பிடிப்பது போல், இவனது மலைப்பு அறியா மார்பினை மதியாது, மள்ளர் குலப் பகை மன்னர்கள் எழுவர் வீறு கொண்டு எழுந்து, நாம் விழுப்புண் பட்ட வெற்றி மள்ளர்கள் என்றும், புகழ் படைத்தவர்கள் என்றும், செழியன் சின்னப் பையன், போரில் கொள்ளையிடத்தக்க அவன் செல்வங்களும் அதிகம் என்றும் இகழ்ந்து பேசி எதிர்த்து வந்த வம்பு செய்கின்ற மள்ள மன்னர்களைத் தீய நோக்குடைய அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்து, அவர்களைப் போர்க்களத்திலே கொல்லாது அவர்களின் ஊர்வரை விரட்டிச் சென்று அவர்களின் மனைவியர் வெட்கிட எம் இறைவன் நெடுஞ்செழியன் வெற்றி முரசு ஒலிக்கச் செய்து வம்பு செய்த அயல்நாட்டு மள்ள மன்னர்களின் ஆணவத்தைக் கொன்று ஒழித்தான்.

செய்யுள் 79

பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ் செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

“எதிர்த்த வம்ப மள்ளர் பலரே
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே,
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?”

பொருள்

தனது பெருமை மிக்க பழைய ஊரின் வாயிலிலே உள்ள குளத்திலுள்ள குளிர்ந்த நீரிலே குளித்து வந்து மக்கள் குழுமிப் பேசும் மன்றம் நடக்கும் இடத்தில் உள்ள வேப்ப மரத்தின் பூந்தளிரைப் பறித்துத் தலையில் சூடிக் கொண்டு போர் முரசம் முழங்க, யானை போலப் பெருமிதத்துடனும், வலிமையுடனும் போர்க்களத்திற்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வந்தான். அவனை எதிர்த்துபூ போரிட வந்த அயல் நாட்டு மன்னர் குலப் பகையரசர் பலரே ஆயினும் பகல் பொழுது குறைவாக இருப்பினும் அவனிடம் மிஞ்சமாட்டார்கள்.

செய்யுள் 80

சோழன் கோப் பெருநற்கிள்ளியைச் சாத்தந்தை யார் பாடியது

போர்க்களம் புகும் மல்லனின் நிலை

“இன் கடுங்க கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வல முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப்பின் ஒதுங்கின்றே -
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்து பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய ஏற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலைதயே”

பொருள்

இனிமையான வெறியூட்டும் கள்ளையுடைய ஆமூரை ஆளுகின்ற மள்ளர் குல மன்னன், ஆமூர் மல்லன் தித்தன், தனது மதங்கொண்ட வலிமையைக் காட்டத் தனது மகன் மல்லனைச் சோழன் கோப்பெருநற்கிள்ளியை எதிர்த்துப் போருக்கு அனுப்பினான். கிள்ளி ஒரு காலால் தன் மேல் வீசப்படுகின்ற ஆயுதங்களை விலக்கிக் கொண்டு ஒரு காலைத் தித்தன் மகன் மல்லனின் மார்பில் வைத்துத் தலையும், காலும் முறியும வண்ணம் வளைத்துக் கொன்றான்.

செய்யுள் 81

சோழன் கோப்பெருநற்கிள்ளியை புலவர் சாந்தத்தையார் பாடியது.

வெண்கொற்றக் குடையையுடைய மள்ளன்
கோப்பெருநற்கிள்ளியின் கைபட்டவர் நிலை

“ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே-ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட்டோரே?”

மள்ளன் கோப்பெருநற் கிள்ளியின் படை மள்ளர்களின் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் ஆரவார ஒலியானது ஏழு கடல்களும் கூடி ஆரவாரிக்கும் ஒலியை விடவும் பெரியதாகும். அவனுடைய யானைகள் பிளிரும் ஒலியானது கார்காலத்தில் வரும் இடி முழக்கத்தை விடவும் அதிகமானது. நாரிலே தொடுக்கப்பட்ட அத்திமாலை அணிந்து வெண்கொற்றக் குடையுடன் வரும் மள்ளன் பெருநற்கிள்ளியின் கைவாள் பட்டவர் எவர்தாம் பிழைத்து எழுவர்?

செய்யுள் 84

வெண்கொற்றக்குடையுடைய மள்ளர்ள கோப்பெருநற்கிள்ளி வெற்றி பெற்ற போது நக்கண்ணையார் அவனைப் பாடியது.

ஏமுற்றுக் கிழந்த மள்ளர்

“என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என்னை போர்க களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன்னன்னே”

பொருள்

எளிய உணவை உண்டாலும் எம் வேந்தன் பகைவர் அஞ்சும் நல்ல தோள் வலிமையுடையவன். நான் சிறைப்புறத்தில் இருந்தாலும் போர்க்களத்தில் அவனைப் பலமுறை காணப் பெற்றதால் போர் அச்சத்தால் பயந்து பசலையான பொன்னிறம் பெற்றேன். இரத்தினங்கள் நிறையப் பெற்ற பேரூர்த் திருவிழாவில் இருந்து கொண்டு தன்னை யார் வெல்ல முடியும் என்று தோள் வலிமை பேசிக் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் மள்ளர் பெருநற்கிள்ளி உப்பு விற்கும் உமணர் அஞ்சுவது போல் பகைவர்களைப் பயமுறுத்தும் படைத் துஐறகளை உடையவன்.

செய்யுள் 89

அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்

“இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
அது போர்’ என்னும் என்னையும் உளனே”

அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?

செய்யுள் 219

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைக் கருவூர் பெருசஞ்சதுக்கத்துப் பூத நாதனார் பாடியது

உண்ணா நோன்பிருந்து உடலை வாட்டும்
மள்ளன் கோப்பெருஞ்சோழன்

“உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே –
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே”.

பொருள்

கவலையுள்ள உள்ளத்தோடு, உள் மனத்துக் காயத்தை ஆற்ற வெயிற் புள்ளிபோல் உள்ள மர நிழலில் இருந்து கொண்டு உடம்பில் உள்ள உனது தசைகளை வாட்டுகின்ற மள்ளர் குல மன்னனே, மள்ள! உன் எண்ணத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலராவார். யானும் அவர்கள் போல உன்னோடு வடக்கிருக்க வராமல் காலந்தாழ்ந்து வந்ததை எண்ணி வருந்துகின்றாயோ?

செய்யுள் 251

புலவர் மாற்பித்தியார் பாடியது

அருவியில் நீராடி முடியை உலர்த்தும் மள்ளர்

“ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக் கண்நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின்
கடுந்த தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!”

பொருள்

ஓவியம் போல ஒளிர்கின்ற அழகான இல்லத்தில் கொல்லிப் பாவை போன்ற வடிவத்தை உடிய வளையல்களணிந்த மகளிரின் ஆபரணங்கள் கழலச் செய்யுமாறு காதற்கனலை மூட்டித் துயர்ப்படுத்தும் மன்னர் குல மன்னனைக் கண்டோம். அவனே மூங்கில் புதர்கள் நிறைந்த உயர்ந்த மலையிலே இருந்து விழும் அருவி நீரில், குளித்து ஆடிக் களைத்து, காட்டு யானை மேல் கொண்டு வந்த விறகால் தீ மூட்டித் தனது முதுகில் புரளும் சடை முடியை உலர்த்திக் கொண்டிருக்கம் மள்ளன் ஆவான்.

செய்யுள் 254

கயமனார் பாடியது

வீழ்ந்து பட்ட மள்ளனின் அன்னை நிலை.

“இளையரும்முதியரும் வேறு புலம் படர,
எடுப்ப எழஅய், மார்பாம் மண் புல்ல,
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளைர்த்த
வளை இல் வறுங் கை ஒச்சி, கிளையுள்
‘இன்னன் ஆயினன், இளையோன்’, என்று,
நின் உரை செல்லும் ஆயின், ‘மற்று
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து,
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகள்
வளனும் செம்மனும் எமக்கு’ என, நாளும்
ஆனாது புகழும் அன்னை”

பொருள்

யாங்கு ஆகுவள்கொல்? அளியள்தானே! இளையோரும், முதியோரும் வேற்று நாட்டுக்குச் செல்லுமாறு, உன் மார்பகம் மண்ணில் பட, உடலை எடுத்தாலும் எழுந்திராமல், விரைத்துப் படுத்திருக்கும் மள்ளர் குலப் போர் மறவனே! வரைகளற்ற வெளுத்துப் போன என் கரங்களை உயர்த்தி, எம் காதலன் மள்ளர் குலத்து இளைஞன், இப்படி ஆகீ விட்டான் என்று நம் சுற்றத்தார்களுக்குக் கூறிட, ஊரில் உள்ள பழுத்த ஆல மரத்தை நோக்கிப் பறவைகள் விரைந்து கூடுவதுபேல் எல்லோரும் விரைந்து இங்கு வந்து விடுவார்கள். என் மகனின் வீரமும், செல்வமும், சிறப்பும் என்னைச் சேர்ந்தது என்று நாளும் அவன் புகழ் பாடிக் கொண்டிருக்கும் மள்ளனது அன்னை இனி என்ன செய்வாள்? அவள் நிலை இரங்கத்தக்கதாகும்.

செய்யுள் 399

தாமான் தோன்றிக் கோவை ஐயூர் முடவனார் பாடியது

மள்ளருள் சிறந்த மள்ளன்

“அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
ஒங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்கு குறை
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ….

மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்
அழிகளின் படுநர் களி அட வைகின்;
பழஞ்சோறு அயினும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவர் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிக்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! இனியே
அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நனக அமுது உண்க என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த…. மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப ட்டித்து,
கடியும்உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
‘கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவற்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது’ என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; நீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் நோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே”.

பொருள்

சோறு சமைக்கும் பெண் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த அளவில்லாத வெண் நெல்லைப் பூண் போட்ட பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசி கொண்டு மிளகுநீர் சேர்த்து வெள் உலையில் வைத்துச் சமைத்த சோற்றில் ஓங்கிச் செழித்துக் காய்த்த புளிக் குழம்பு சேர்த்து, நெல் வயல்களில் உள்ள மோட்டுகளில் (குழீ, வளை) இருக்கும் வரால் மீன் கொண்டு சமைத்த கறியும், வரிகளையுடைய ழுவை மீன் கொண்டு சமைத்த இறைச்சியும், வயல்களில் படர்ந்துள்ள வள்ளைக் கீரையும், சிறுகொடிகளில் காய்க்கும் பாகற்காயும், பாதிரிமரத்தின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற் போன்ற தோலை நீக்கி மற்ற இனமானவற்றோடு சேர்த்துச் சமைத்த கூட்டைச் சோறு மூழ்கும்படி ஊற்றிப் பிசைந்த முழு அரிசிச் சோறு உண்டு, வயல்களில் பொழுது எல்லாம் உழைக்கும் உழவர் (மள்ளர்), உண்ட மயக்கம் தீர ஓய்வெடுத்திருப்பார்.

பழஞ்சோறும், பாசன நீர் நிறையப் பெற்ற கழனிகளையும், தோட்டங்களையும் உடைய பழியில்லாத நல்ல புகழையுடைய காவிரி நாட்டு மன்னன், மள்ளர் மரபினர் தலைவர், கிள்ளிளவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றோம். பிறரிடம் ஒரு காலத்திலும் செல்லமாட்டேன். பிறருடைய முகத்தை உதவி வேண்டிப் பாரேன். நீண்ட மூங்கிலாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்று, இணைமகள் சமைத்த புளித்த தண்­ர் கலந்து பிசைந்த சோற்றை நேரமில்லாத நேரத்தில் உண்ணும் நிலையில் உள்ளவன். ஒரு நீர்க்கரையில் கழிமுகம் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னே! இனியே, நல்லவர்களுக்கு நல்லவனும், கொடியோர்க்குக் கொடியவனும் மள்ளர் வம்சத்தவருள் சிறந்த மள்ளனும், பாண்டியர்களின் வழித் தோன்றலுமான தாமான் தோன்றிக்கோ, நல்ல புகழ் வாய்ந்தவன், நின்பால் அன்பு கொண்டு விட்டான் ஆதலின் நீ விரும்பும் செல்வத்தைப் பெறுவாயாக என அறிந்தோர் கூறினர். இவ்வாறாகப் புறநானூறு மள்ளர் குல மக்களின் ஏர்த் தொழிலையும், போர்த் தொழிலையும், போற்றி, இவர்தம் வரலாற்றுச் சிறப்புகளையும், பண்பாட்டுப் பெருமைகளையும் எழிலுற எடுத்துரைப்பது இத்தமிழ் கூறும் நல்லுலகில் எக்குலத்தோருக்கும் இல்லாத உயர்வு இக்குலத்தோருக்கு இருப்பதைக் காட்டுகிறது.

Posted in Uncategorized | Leave a comment

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…

எம்.சி.ஆர். என எல்லோராலும் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் மகன் இராம்சந்தர் மேனனை ‘மலையாளி’ எனக் கடித்துரைத்த கருணாநிதி, மலையாளியான எம்.சி.ஆருக்குத் தமிழகத்தை ஆள எந்தத் தகுதியும் இல்லையென்றும் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு எதிர் வினையாக எம்.சி.ஆர்., ‘நான் மலையாளிதான், நீ யார்?’ என வினவியதோடு, அதற்கு விடையும் தந்தார். ‘ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி’ என்பதே எம்.சி.ஆர். கொடுத்த வினா எதிர் விடையாகும். இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். ‘கள்ளர்களின் பூர்வீர்கம் இராமநாதபுரம்’ என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா’ என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைக் கண்டித்துத் தமிழர் வரலாற்றுப் பேரறிஞர் இரா.தேவ ஆசீர்வாதம் அவர்கள், “கள்ளர்களின் பூர்வீகம் இராமநாதபுரம் என்ற கதையெல்லாம் இருக்கட்டும்; கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா” என்று அடித்து நொறுக்கினார். அதனைத் தொடர்ந்து அறிவர் குணா, கருணாநிதியைத் தெலுங்கர்தான் எனத் தெளிவுபடுத்தினார். இந்தச் செய்தியை அரிமாவளவன் தனது ‘வேர்கள்’ இதழ் மூலமாக மூலை முடுக்கெல்லாம் வேகமாகக் கொண்டு சென்றார். மள்ளர் மீட்புக் களத்தின் வெளியீடான மண்ணுரிமையும் கருணாநிதி தெலுங்கர் என்பதை பரப்புரை செய்து கருணாநிதியை பதறடித்தது. அண்மைக் காலத்தில் ஆரியப் பிராமணனான ‘சூனாசாமி’ என அழைக்கப்படும் சுப்பிரமணிய சாமி என்ற தமிழ்ப் பகைவன்கூட கருணாநிதியை, “அவர் தமிழர் அல்லர்; அவர் ஒரு தெலுங்கர்” என்பதைப் போட்டுடைத்தான். இந்தச் செய்தி சூனியர் விகடனில் பதிவாகிக் கருணாநிதியைக் கதிகலங்கச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையில் வாடிய மு.கருணாநிதியின் முதல் திருமணத்திற்குத் தாலி வாங்கிக் கொடுத்த பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா ‘நாத்திகம்’ இராமசாமி அவர்கள் கருணாநிதியின் தமிழ் மொழி, இன நலன்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளைக் கண்டு மனம் பொறாமல், கருணாநிதி ‘தமிழ்ப் பகைவர்’ என்பதைத் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, தான் நடத்தி வந்த ‘நாத்திகம்’ என்னும் இதழினூடாகக் ‘கருணாநிதி ஒரு தமிழர் அல்லர். அவர் ஒரு தெலுங்கர்’ என்பதைப் பேரறிவிப்புச் செய்தார். இருப்பினும், இதற்கெல்லாம் எந்தப் பதிலும் கூறாமல் கருணாநிதி தனக்கேயுரிய பாணியில் கமுக்கம் காத்து வருகிறார். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் என ஒப்பாரி வைத்துத் திரியும் தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும். இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே! ‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும். தி.மு.க.வில் இருந்த முன்னணித் தலைவர்களெல்லாம் தங்களது பெயரினைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்த போது, இராமையா தன்னுடைய பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி தன்னுடைய பெயரை நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி தன்னுடைய பெயரை வீரமணி என்றும் தமிழ்ப்படுத்தி மாற்றிக் கொண்ட போதிலும், கருணாநிதி அதற்கும் மறுத்து விட்டார். தனது மகனான மு.க.அழகிரியின் பெயரின் பின்னொட்டாக இருக்கும் ‘கிரி’ என்பது தமிழ்ச் சொல்லல்ல. மு.க.ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயர் அல்ல. பேரக்குழந்தைகளின் பெயரான தயாநிதி, கலாநிதி, உதயநிதி என்பதும் தமிழ்ப் பெயர்கள் அல்ல.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார். திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’. தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர். தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர். அண்மையில் ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத்தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 25000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி. ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் உள்ள கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே! கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளில் தெலுங்கில் ஜெமினி, மலையாளத்தில் சூர்யா, கன்னடத்தில் உதயா, தமிழகத்திலோ சன் டி.வி! என்னே! மொழிப்பற்று… இது மட்டுமன்றி,

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி. நமது தாய்த்தமிழ் மொழியை அழிப்பதும், தமிழ்ப்பண்பாட்டை ஒழிப்பதும் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிகளின் தலையாளப் பணிகளாகும். “தமிழை ஆட்சி மொழியாக்குவேன்” என்ற ஒரே தீர்மானத்தைப் பல தி.மு.க. மாநாடுகளில் பலமுறை நிறைவேற்றித் தமிழர்களைக் கோமாளிகளாக்கி – ஏமாளிகளாக்கி ஆட்சிக் கட்டிலில் அதிக ஆண்டுகள் அமர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கர் மு.கருணாநிதி, தமிழை ஆட்சி மொழியாக்காமல் அதனை அழிக்கும் வேலையையே தொடர்ந்து செய்து வருகிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனக் கூவிக், கூவித் தமிழர்களிடம் கூழைக் கும்பிடு போட்டுத் தமிழர்களை ஏமாற்றி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் அதிகாரத்தைத் தமிழர்களிடமிருந்து பறித்துக்கொண்ட தெலுங்கர் மு.கருணாநிதி, இன்று தமிழர்கள், “எங்கே தமிழ்? எதிலே தமிழ்?” எனத் தங்களின் தாய் மொழியைத் தமிழ் மண்ணிலேயே தேடித் திரிய வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

தமிழீழ விடுதலையைச் சிதைத்துத் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தலைமறைவு வாழ்க்கைக்கு ஆட்படுத்தியதில் தெலுங்கர் மு.கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியதாகும். தெலுங்கரான தன்னை உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகக் காட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, இன்று உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் மேதகு பிரபாகரன்‘ரைத் தமிழரினத் தலைவராக ஏற்றுக் கொண்டதைச் செரிக்க முடியாமல், முகம் செத்துப் போய்ப் புகழுக்காகப் பொறாமை கொண்டு ஈழத்தமிழர் விடுதலையை அழித்தொழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து முடித்த தமிழ்ப் பகைவன்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி. உயிரைப் பணயம் வைத்து அன்றாட வாழ்விற்காகப் போராடும் மீனவ உறவுகளைப் ‘பேராசைக்காரர்கள்’ என இழிவுபடுத்தியவர். தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் ‘கருணா’நிதியின் நயவஞ்சக நரித்தனத்தை இவ்வாறு பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம். நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட தமிழினம் தனது கால ஓட்டத்தில் இதுவரைக் கண்டிராத பெரும் பகை – தீராப் பகை திராவிடர்-தெலுங்கர் மு.கருணாநிதியே! என்பதை எமது மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில், தனது குடும்ப நலன் ஒன்றிற்காகவே தமிழர் நலன்களைத் தொடர்ந்து அழித்து வரும் இவர், மீண்டும் தமிழர்களைக் கேணைக் கிறுக்கர்களாக்கவே ஈழத்தமிழர்களைக் கொண்டு குவித்த வெற்றி விழாவினை இராசபட்சேவின் ஆசியோடும், சோனியாவின் ஆதரவோடும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்னும் பெயரில் கோவையில் கொட்டமடித்து மள்ளர் குலத்தில் பிறந்த மொழில் பேரறிஞர் பாவாணரை இருட்டடிப்புச் செய்த ‘மு.க.’வை மூக்கறுத்து மூத்தத் தமிழ் குடி நாம் என்பதை நிலை நாட்ட வேண்டியது நாம் விரும்பியோ, விரும்பாமலோ காலம் நம்மிடம் கையளித்துள்ள கடமையாகும்.

தமிழ்ப் பகைவரான மு.கருணாநிதி தமிழ் முதுகுடி மக்களான தேவேந்திர குல வேளாளர்களுக்கு நண்பரா? பகைவரா? என்பது குறித்துப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது இக்காலக் கட்டத்தின் மீத் தேவையாகும்.

1). தேவேந்திர குல வேளாளர்களின் எழுச்சித் தலைவரும், ஈக வேங்கையுமான மாமள்ளர் இம்மானுவேல் சேகரனை, 1957 செப்தம்பர் 11 இல் பரமக்குடியில் வெட்டிப் படுகொலை செய்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்த கொலைகாரர்களை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தண்டித்திருந்தது. 1967 இல் தி.முக. ஆட்சிக்கு வந்தவுடன், அண்ணாத்துரைக்குக் கடும் அழுத்தம் கொடுத்த கருணாநிதி, தனது அரசியல் ஆதாயத்திற்காக மாவீரர்.இம்மானுவேல் சேகரனை வெட்டிப் படுகொலை செய்த, நீதிமன்றத்தால் வாழ்நாள் தண்டனை வழங்கப்பெற்று சிறையிலிருந்த மறவர்களை உடனடியாக விடுதலை செய்து, தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரான தனது முதல் சாதனையை-சதிச் செயலை நிறைவேற்றினார்.

2). 1968 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் வந்தேறி வடுகன் கோபாலகிருட்டிண நாயுடு என்ற தெலுங்கனால் 18 மள்ளர்கள், 26 பறையர்கள் என 44 தமிழர்கள் குடிசைக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது அண்ணாத்துரை தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், 44 தமிழர்களை எரித்துக் கொன்ற ஆந்திர அகதி, தெலுங்கன் கோபாலகிருட்டிண நாயுடு உள்ளிட்ட 23 கொலைகாரர்களையும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கர் மு.கருணாநிதி திட்டமிட்டு விடுதலை செய்தார். வெண்மணி நிகழ்வீல் தீக்காயம் பட்டு உயிர் தப்பிய தேவேந்திர குல மக்களை நாகை அரசு மருத்துவனையில் நேரடியாக நலம் விசாரிப்பது போல் சென்று, அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வைத்தார் இந்த கருணாநிதி. அப்பகுதித் தேவேந்திர குல மக்கள் கம்யூனிசுடு கட்சியின் வாக்கு வங்கயி‘கத் திகழ்ந்ததால், தெலுங்கர் மு.கருணாநிதி தனது தமிழர் விரோதத்தை இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டார். இந்த வழக்கினை விசாரனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கணபதி பிள்ளை விசாரணை ஆணையத்தால் “கோபாலகிருஷ்யநாயு மிகப் பெரிய மிட்டாதாரர்; கார் வைத்திருப்பவர்; அவர் இந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டார்;” என்று சொல்ல வைத்தவர் இந்தக் கருணாநிதி.

3). 1989 இல் தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம் பகுதிகளில் கருணாநிதி தனது கட்சிக்காரர்களான முத்துமனோகரன், மணிமாறன் போன்ற கள்ளர்களைக் கொண்டு தேவேந்திர குல மக்களுக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்தியவர். கலவரத்திற்குக் காரணம் யார்? என்று விசாரணை செய்வது போல் நாடகம் ஒன்றினையும் ஆடினார். கருணாநிதியின் அந்த நாடகத்தை நம்பிய தேவேந்திர குல மக்கள், கலவரத்தை நடத்தி வரும் கள்ளர்களின் பெயர்ப் பட்டியலோடு கூடிய புகார் மனுவினைக் கருணாநிதியின் கொடுத்தனர். ஆனால் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை. இந்தச் சாதிய மோதலை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாசுகரன் விசாரணை ஆணையமும், கருணாநிதியின் குரலையே எதிரொலித்தது. இந்தச் சாதிய மோதலில் கருணாநிதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கண்டமனூர் காவல் நிலையத்திற்குள் வைத்துக் கைது செய்து கொண்டு சென்ற 10 ஆம் வகுப்புப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், 8 ஆம் வகுப்புப் படித்து வந்த ஒரு மாணவி உட்பட ஐந்து தேவேந்திரர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. அன்றையக் காலக்கட்டத்தில் தேவேந்திர குல மக்கள் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்ததாலேயே கருணாநிதி இவ்வாறானதோர் கொடூர நடவடிக்கைகளில் இறங்கித் தேவேந்திர குல மக்களை அழிக்கும் வேலையைச் செய்தார்.

4). 1989 இல் ‘தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தி’ என்று பேசிய கருணாநிதி பின்னர் ‘தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி’ என்றும், ‘தலித்துகளின் சம்பந்தி’ என்றும் கூறித் தேவேந்திர குல மக்களைக் கேவலப்படுத்தினார். தற்போது ‘ஆதி திராவிடர்களின் சம்பந்தி’ எனக்கூறி தேவேந்திர குல மக்களை அவமானப்படுத்தி வருகிறார். கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களின் சம்பந்தியா? தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த காந்திமதி, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அழகிரியும், காந்திமதியும் காதல் திருமணம் செய்து கொள்ளப் பெருந்தடையாக இருந்தவர்தான் இந்தக் கருணாநிதி. அழகிரி, தேவேந்திர குலப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது என்பதற்காகப் பல மறைமுகமான அளிம்பு வேலைகளை நடத்திப் பார்த்தார் இந்தக் கருணாநிதி. ஆனால் அது பலிக்கவில்லை. “நீ, அழகிரி, காந்திமதியை வாழ விடாமல் தடுத்தாலோ, கெடுத்தாலோ உன்னால் தமிழகத்தை ஆள முடியாது. தமிழ் நாட்டிற்குள்ளும் நீ அரசியல் செய்து வாழ முடியாது. உனது சமத்துவ வேடம் கலைந்து விடும். உனது திராவிட அரசியல் தொலைந்து விடும்” என்று பெரியார் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் கருணாநிதியைக் கடுமையாக எச்சரித்தார். அதன் பின் அழகிரி, காந்திமதி திருமண விடத்தில் மூக்கை நுழைக்காமல், மு.கருணாநிதி ஒதுங்கிக் கொண்டார். கருணாநிதியின் “தேவேந்திர குல மக்களுக்கு நான் சம்பந்தியாகி விட்டேன் என்ற பேச்சைத் தேவேந்திர குல மக்கள் அருவருக்கத்தக்க பேச்சாக நினைத்துக் கண்டித்ததற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வண்ணம் இப்போது நடத்து கொண்டிருக்கிறார்” என்று போடி, தேவாரம் சாமி மோதல்களின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர். இராமதாசு அவர்கள் சூனியர் விகடனுக்கு அக்டோபர் 18, 1989 பக்கம்-13) அளித்த நேர்காணலின் போது தெரிவித்த மேற்கண்ட செய்திகளும் நினைவிற் கொள்ளத்தக்கவை.

5). தேவேந்திர குல மக்களைத் தாழ்த்தப்பட்டோர் எனப் பேசிப் பேசியே தரம் தாழ்த்தி வரும் தெலுங்கர் மு.கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனில், ஏன் தாழ்த்தப்பட்டார்கள்? எதற்காகத் தாழ்த்தப்பட்டார்கள்? எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? எந்த வகையில் தாழ்த்தப்ட்டார்கள்? எந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டார்கள்? என்பது குறித்து எவ்வித விளக்கமும் கொடுக்காமல் தேவேந்திர குல மக்களுக்குத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்ற முத்திரை குத்தி அரசியலிலும், பொருளியலிலும், முன்னேற விடாமல் முடக்கி வைத்தவர். தேவேந்திர குலத்தவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றால், கருணாநிதியின் குலத்தவர்கள் உயர்த்தப்பட்ட சாதியினரா? தேவேந்திர குல வேளாளர்களை விடத் தமிழ் நாட்டில் உள்ள பிற சமூகங்களை அனைத்தும் எந்த வகையில் உயர்ந்தவை? கல்வியிலா? சம்கத்திலா? அரசியலிலா? பொருளியலிலா? வீரத்திலா?? இது குறித்தும் கருணாநித எவ்வித விளக்கமும் இதுவரை சொல்லவில்லை. ஏர்த்தொழிலையும், போர்த் தொழிலையும் குலத் தொழிலாகக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களைத் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று அரசு ஆவணங்களில் அடையாளப்படுத்திய கருணாநிதி, தேவேந்திர குல வேளாளர்களை விட எந்த அடிப்படையில் குற்றப்பரம்பரையினரான கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சீர் மரபினரையும், ‘காணாமை’ என்னும் சமூக இழிவுகளைக் கடந்து வந்த சாணார், வண்ணார், அம்பட்டர் முதலிய சாதியினரையும், உயர்ந்த சாதியாகக் காட்டிக் கொள்ளும் திராவிட கழிசடை மு.கருணாநிதி, இதற்கும் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. தமிழர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சாதிய மோதல்களை உருவாக்கி, தமிழர் ஒற்றுமையை சிதைத்து, தனது குடும்ப அரசியலைத் தக்க வைத்துக் கொண்டுள்ள ‘நாதசுர கலைஞர்’ மு.கருணாநிதியின் யோக்கியமற்றத்தனம் வீழ்த்தப்பட வேண்டும்.

6). Scheduled Caste என்பதற்கு ‘பட்டியல் சாதி’ என மொழி பெயர்க்காமல் ‘தாழ்த்தப்பட்டோர்’ என்று தவறான மொழி பெயர்ப்பைச் செய்த தெலுங்கர் மு.கருணாநிதி தற்போது Scheduled Caste என்பதற்கு ‘ஆதி திராவிடர்’ என்று மொழியாக்கம் என்ற பெயரில் மொழி அழிப்பு வேலையையும், இன அழிப்பு வேலையையும் ஒரே வேளையில் செய்து முடித்துள்ளார். திராவிடம் என்பதே இல்லாததை இருப்பதாகக் காட்டும் போலித்தனம் என்பதைக் கருணாநிதிக்கு உணர்த்திய பின்பும், திராவிடம் என்று கூறித் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் காலித்தனம் என்பதைத் தமிழர்களுக்கு உண்ரத்திய பின்பும், தற்போது கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களையும், ஆதி திராவிடர்களாக்கிப் பார்க்கத் துடிக்கின்றனர். வந்தேறிகள் திராவிடர்கள் என்று அரசியல் செய்த போது, தமிழர்களான பறையர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று கூறிக் கொண்டனர். பின்னர் 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் சட்டமன்றத்தில் முன் மொழிவு ஒன்றினைக் கொணர்ந்து, மார்ச் மாதம் முதல் அரசாணை எண்.817இன்படி பறையர் தங்களை ஆதி திராவிடர் என ஆக்கிக் கொண்டனர். ஆனால் தற்போது திராவிடர் கருணாநிதியோ, தேவேந்திர குல வோளாளர்களையும் ‘ஆதிதிராவிடர்’ ஆக்கப் பார்க்கிறார். பள்ளர் குல மக்களைப் பறையராகவே பாவிக்கிறார். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களும் இசைவு தந்தால் அவர்களை முக்குலத்தோர் என அறிவிக்கத் தயாராக உள்ளேன் என்று வம்படியாகக் கூறி வரும் கருணாநிதி தேவேந்திர குல வேளாளர்களை யாரைக் கேட்டு ஆதி திராவிடர் என அழைத்து வருகிறார். இந்த உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்? தேவேந்திர குல வேளாளர்களைத் தாழ்த்தப்பட்டோர், தலித், ஆதிதிராவிடர் என்று தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இழிபெயர்களால் அடையாளப்படுத்திக் கேவலப்படுத்தி வரும் கருணாநிதி, தனது தெலுங்குச் சாதியான சின்ன மேளம் என்பதை மட்டும் இசை வேளாளர் என்று இட்டுக் கூட்டிச் சொறிந்து மகிழ்கிறார். ‘Scheduled Caste’ என்பதற்குச் சரியான மொழியாக்கம் என்ன என்று கேட்டால் ‘Scheduled Caste’ என்பதற்கு இணையான பெயர் ‘ஆதிதிராவிடர்’ என்று பல்லிளித்துக் கொண்டு அயோக்கியத்தனமாகப் பதிலளிக்கின்றார்.

7). தமிழ் இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்ததாகக் கூறிக் கொள்ளும் தெலுங்கர் மு.கருணாநிதி, சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களான புராணங்கள், பிரபந்தங்கள், பள்ளு இலக்கியங்கள் என எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் பேசப்படுகின்ற மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் இலக்கியப் பெயரினை இதுவரையில் ஒரு முறை கூட இவர் உச்சரிக்கவில்லை என்பதைத் தேவேந்திரர் குல மக்களுக்கு எச்சரிக்கையோடு தெரிவித்தாக வேண்டிய தேவை இங்ஙனம் எழுகிறது.

8). ஈழத்தமிழர் சிக்கலைத் திசை திருப்பி ஈழ விடுதலையைத் தனது நரித்தனத்தில் மூலம் தடுக்கவும், கெடுக்கவும் கருணாநிதி துடிப்பதெல்லாம் ஈழத்திலும், பூர்வீகத் தமிழர்களாகப் பள்ளர்கள் 45 விழுக்காட்டினரும், பள்ளர்களின் உட்பிரிவான கரையார் 23 விழுக்காட்டினரும், நளவர் 17 விழுக்காட்டினருமி ஆக மொத்தம் அங்குள்ள பூர்வீகத் தமிழர்களில் 85 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதை அறிந்து கொண்டதாலும், தேயிலைத் தோட்டத் தொழிலுக்காகத் தமிழகத்திலிருந்து ஈழத்திற்குச் சென்று வாழுகின்ற மலையகத் தமிழர்களில் 91 விழுக்காட்டினர் தேவேந்திர குல மக்களே என்பதைத் தெரிந்துக் கொண்டதாலும் தான். இந்த உண்மையை இங்குளள் தேவேந்திர குலு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே கடந்த முறையில், தேவையற்ற சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தி மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டி சுரேசு என்ற தேவேந்திர குல இளைஞரைச் சுட்டுக் கொன்றார். வேறு எந்தச் சமூகத்தினரையும் தனது ஆட்சிக் காலத்தில் கருணாநிதி சுட்டுக் கொன்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

9). கடந்த சட்டமன்றத் தேர்தலில் 58% தேவேந்திர குல மக்களின் வாக்குகளைப் பெற்றதாலேயே கருணாநிதியால் இந்த சிறுபான்மை அரசினை அமைக்க முடிந்தது. இச்செய்தியினை ‘இந்தியா டுடே’ உள்ளிட்ட ஊடகங்கள் பதிவு செய்திருந்தன. “தேவேந்திர குல மக்களின் 58% வாக்குகளே தி.மு.க. ஆட்சியமைக்க காரணம். ஆகவே நீங்கள் தேவேந்திர குல மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முன் வர வேண்டும்” என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கருணாநிதியிடம் கூறியபோது, அதற்குக் கருணாநிதியும், அவர் மகன் ஸ்டாலினும் “என்னய்யா பெரிய தேவேந்திர குல வோளாளர் சமூகம்? செயலலிதாவை உங்களுக்குப் பிடிக்காததால் எங்களுக்கு ஓட்டுப் போடுகிறீர்கள். எங்களுக்காக ஒன்றும் நீங்கள் ஓட்டுப் போடவில்லை” என்று தனது எரிச்சலைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.

10). உலகில் முதல் மனித வெடிகுண்டும், பிற்காலப் பாண்டியரான வெட்டும்புலி பெருமாள் பாண்டியனின் வழித் தோன்றலும், ஈழத்தரசன் பாயும்புலி பண்டாரக வன்னியனை சந்தித்து வந்த வரலாற்றுத் தலைவனும், தற்கொலைப் படைத் தளபதியுமான, மாமள்ளர் சுந்தரலிங்கக் குடும்பனாரை இந்தக் கருணாநதி ‘வீரன் சுந்தரலிங்கம் என்று குறுக்கினார். கேட்டால் இவர் சாதிப் பெயரையே உச்சரிக்க மாட்டாராம். ஆனால் ‘அழகுமுத்துக் கோன்’ என்கிறார். மூச்சுக்கு முன்னூறு முறை முத்துராமலிங்கத் தேவர் என்று முனகுகிறார். முத்துராமலிங்கத் தேவருக்கு மூலை முடுக்குகளிலெல்லாம் சிலை வைத்தவர் இவர். முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் என மூன்று இடங்களில் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியவர் இவர். கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூசை என்ற பெயரில் கொட்டித் தீர்த்தவர். ஆனால், தேவேந்திர குல மக்களின் சமூகப் பெயரினை மட்டும் உச்சரிக்கமாட்டாராம். அதுமட்டுமின்றித் தளபதி சுந்தரலிங்க குடும்பனாரின் தலையளவு உருவத்தை ஒரு வாயிற்காவலன் போல் சித்தரித்துப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் பொறித்து அவமானப்படுத்தியுள்ளார்.

11). செயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருந்துகளின் பெயரை நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய பேருநூதகளைத் தேவேந்திர குல மக்கள் நிறைந்த ஓட்டப்பிடாரம் பகுதியல் ஓட விடாமல், விருதுநகர் பகுதியில் மறவர் குடியேற்றம் மிகுந்த ஊர்கள் வழியாக ஓடவிட்டுத் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தினார். சுந்தரலிங்கனார் பெயர் தாங்கிய அரசுப் பேருந்துகளை ஓட விடாமல் தடுத்து, வன்முறை செய்த மறவர்களிடம் கருணாநிதி மண்டியிட்டார். அரசுக்கு எதிராகச் செயல்பட்ட மறவர்கள் மீது கருணாநிதி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. மாறாக மறவர்களின் எச்சரிப்பை ஏற்று, பேருந்துகளின் பெயர்களை நீக்கினார். இதன் மூலம் சுந்தரலிங்கனார் பெயர் மட்டுமின்றி, திருவள்ளுவர், கண்ணகி, உள்ளிட்ட தமிழர் அடையாளங்களையும் தமிழ் மண்ணிலிருந்து தூக்கினார்.

12). 1995 ஆம் ஆண்டு கன்னடத்துக் கொள்ளைக்காரியான செ.செயலலிதாவின் கூலிப்படையும், குற்றம்பரம்பரையில் தோன்றி சசிகலாவின் காலிப்படையும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொடியன்குளம், காசிலிங்கபுரம், ஆலந்தா ஆகிய தேவேந்திர குல மக்கள் வாழும் உர்களைச் சூறையாடியும், கொள்ளையடித்தும் சின்னாபின்னப்படுத்தியது. இதனை விசாரணை செய்ய அ.தி.மு.க. ஆட்சியின் போதே ‘கோமதி நாயகம் விசாரணைக்குழு’ தனது அறிக்கையை தி.மு.க.வின் ஆட்சியின் போது – கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வராயிருந்தபோது வெளியிட்டது. அப்போது அந்த அறிக்கையில் ‘கொடியன் குளத்தைக் காவல்துறையினர் தாக்கவில்லை’ என்ற அநீதி தேவேந்திரகுல மக்களுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கர் மு.கருணாநிதிக்குக் கன்னடப் பிராமணத் தியான செ.செயலலிதா எதிரியா? அல்லது தனித் தமிழர்களான தேவேந்திர குல மக்கள் எதிரியி‘? என்பதை இதனைக் கொண்டே முடிவு சொல்லலாம்.

13). 05.05.1997 அன்று துறையூரில் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கருணாநிதியின் காவவல்துறை திட்டமிட்டு சமூகப் போராளிகளான துறையூர் பிலிப் அந்தோணியையும், ஆலந்தா சண்முகத்தையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது.

14). 23.07.1999 அன்று உரிமைக்காகப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் இசுலாமியர் 3 போர்; மீனவர் 1; அடையாளம் தெரியாதவர் 1; தேவேந்திரர்கள் 13 பேர்; என பதினெட்டுத் தமிழர்கள், தெலுங்கள் மு.கருணாநிதியின் திட்டமிட்ட நயவஞ்சகத்தால், பாபநாசம் அணையிலிருந்து அளவிற்கு அதிகமாகத் தண்­ரைத் திறந்து விட்டு, ஆற்றுவரத்தை அதிகரிக்கச் செய்து, ஆட்சியர் அலுவலக மாடியில் மக்களைத் தாக்குவதற்காக முன்கூட்டியே கருங்கற்களையும், செங்கற்களையும் ஏற்றி வைத்துக் காவலர்களுக்க முன்கூட்டியே கொலைத் திட்டத்தை எடுத்துகூறிச் செங்கற்களாலும், கருங்கற்களாலும் எறிந்து தாக்கியும், தடியடி நடத்தியும் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டனர். தேவேந்திர குல மக்களைத் தான் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டே அடக்கியும், ஒடுக்கியும், பிற சாதியினரை மோத விட்டும் படுகொலைகளை நிகழ்த்தி வந்த கருணாநிதி இந்தப் போராட்டத்திலும் தனது காவல்துறையை ஏவி விட்டுப் பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல் 18 பேரை அடித்து ஆற்றில் வீசிப் படுகொலை செய்தார். 1 1/2 வயது விக்னேசு என்ற தேவேந்திர குலக் குழந்தையைக் கருணாநிதியின் கொலை வெறி பிடித்த காவல்துறை காலால் மிதித்து, கழுத்தை நெறித்துக் கொன்று ஆற்றில் தூக்கி வீசியது. இதனைப் படமெடுத்த பத்திரிக்கையாளர்கள் கடுமையாகத்தாக்கப்பட்டு, அவர்களின் புகைப்படக் கருவிகளும் பிடுங்கி நொறுக்கப்பட்டன. இந்தக் கொலைகளை நியாயப்படுத்த நினைத்த கருணாநிதி ‘மோகன் விசாணைக் குழு’ என்ற பெயரில் ஒன்றை அமைத்தார். அந்த மோகன் விசாரணை ஆணையம் கருணாநிதியைக் காப்பாற்றுவதற்காக “17 பேர்களும் ஆற்றில் தாமாகவே விழுந்து செத்து விட்டனர்” என்று சொல்லி நீதியின் குரல்வளையை நெறித்து உண்மையைச் சாகடித்தது.

15). விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டியில் கருணாநிதியின் காவல்துறை தேவேந்திரர்களின் மீது தாக்குதல் நடத்தி 50 அகவையுடைய லெட்சுமியம்மாள் என்னும் தேவேந்திர குலப் பெண்மணியை அடித்துக் கொன்று மதுரை தத்தநேரி சுடுகாட்டில் அனாதைப் பணிமாக எரியூட்டியது.

16). அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், மூலகக்ரை மேலூரைச் சார்ந்த இராமச்சந்திரன் என்ற தேவேந்திர குல இளைஞரைக் கருணாநிதியின் காவல்துறை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அடித்தே கொன்றது. இந்தக் கொலையை தி.மு.க. அரசு வழக்கம் போல திட்டமிட்டு மூடி மறைத்தது.

17). தற்போது தேனி மாவட்டம், டொம்புச் சேரியில் தேவேந்திர குல மக்களை அடித்து, உதைத்து வழக்குகளில் சிக்க வைத்துச் சீரழித்து, உடமைகளைச் சூறையாடி கருணாநிதியின் காவல்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளது.

அ.தி.மு.க.வில் தங்கள் சமூகத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சசிகலாவும், கள்ளர்-மறவர் கூட்டமும் இருப்பதால் அந்தக் கட்சியையே ஆட்சியை விட்டு அகற்றி தேவேந்திர குல மக்கள் தி.மு.க.வி வாக்கு வங்கியாக மாறியதின் காரணம்தான் விளங்கவில்லை. ஏனென்றால் தி.மு.க.வில் அதிகாரப் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவர்களும் – ஆதிக்கத்தையும், அடாவடித்தனத்தையும் மேற்கொள்ளக் கூடியவர்களும் கள்ளர்-மறவர்களே என்பதைத் தேவேந்திர குல மக்கள் கவனிக்கத் தவறி விட்டனர். தி.மு.க.வில் உள்ள கருப்பசாமி பாண்டியன் ஒரு மறவர். ஆவுடையப்பன் ஒரு மறவர். மாலை ராசா ஒரு மறவர். சே.கே.ரித்தீசு ஒரு மறவர். ஐ.பெரியசாமி ஒரு கள்ளர். டி.ஆர்.பாலு ஒரு கள்ளர். எல்.கணேசன் ஒரு கள்ளர். தங்கம் தென்னரசு ஒரு கள்ளர். பொன்.முத்துராமலிங்கம் ஒரு கள்ளர். மதுரை துணை மேயர் மன்னன் ஒரு மறவர். நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம் ஒரு மறவர். நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் விசுவநாதன் ஒரு மறவர். தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா ஒரு கள்ளர். தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கள்ளர்+வடுகர் கலப்பு. மு.க.அழகிரியைச் சுற்றி நின்று தேவேந்திர குல மக்களுக்கு எதிராக அரசியல் செய்யக்கூடிய தி.மு.க.வில் மாவட்டம், வட்டம், குட்டம் என்று பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் அத்தனை பேர்களும் கள்ளர்களும், மறவர்களுமோயவர். ஆக, தி.மு.க.வின் ஆட்சி என்பது கள்ளர் – மறவரைக் கொண்டு, தேவேந்திர குல மக்களை அடக்கி ஒடுக்குகின்ற ஆட்சி என்பதை இனிமேலாவது எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வினைப் பெறுவதற்கு அடிமைச் சிந்தனைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆளுமைச் சிந்தனையோடும், தனித்தன்மையோடும் தேவேந்திர குல மக்கள் தமது முந்தைய வரலாற்றின் மூலம் மீண்டெழுந்து, தலைநிமிர்வு காண வேண்டும்.

செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவர் சமூகத்தின் ஆட்சி என்றும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வின் ஆட்சி என்பது தேவேந்திர குல மக்களின் ஆட்சி போன்று என்றும், ஒரு மாயத் தோற்றத்தினை திராவிடம் நம் மக்கள் நடுவே உருவாக்கி வைத்துள்ளது. உண்மையென்னவென்றால் அ.தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு கன்னடர் ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சி என்பது ஒரு தெலுங்கர் ஆட்சி. தமிழ் மண்ணில் தமிழினத்தின் தலைக்குடியாகிய மள்ளர் எனப்படும் தேவேந்திர குல மக்கள் தமிழர் ஆட்சியை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இந்த ஆண்டகுடி மீண்டும் தமிழ் மண்ணை ஆள வேண்டும்.

தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்ற தெலுங்கர் மு.கருணாநிதி, ‘தமிழ் இனத்தின் தலைக்குடியாகிய தேவேந்திர குல மக்களுக்கு நண்பரா? பகைவரா?’ என்பதற்குத் தேவேந்திர குல பெருமக்களே நீங்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.

தேவேந்திர குலச் சொந்தங்களே!

திற விழி! திருப்பு முகம்!

திராவிடத்தை வேரறுப்போம்!

தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!!

Posted in Uncategorized | Comments Off

உடையும் புனைவுகளும் விளையும் மருத நில வாழ்வும்- முனைவர் சி. கலைமுகிலன்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து….

பள்ளு இலக்கியம் மறுவாசிப்புப் பிரதிக்கு வெளியே.. என்னும் நூலின் திறனாய்வுக் கட்டுரையாக இது அமைகிறது. தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களால் கட்டப்பட்ட சமூகம். ஒரு சாதி தனக்கான வரலாற்றின் மூலமே மையம் / விளிம்பு என அடையாளப்படுகிறது. வரலாறு என்பது “அடிப்படையில் தனக்கான உரையாடலைத் தாமே கட்டுவது தான்” என்று அறிஞர் டெப்ரேய் கூறுவார். இந்த வரலாறுகளைத் தேடிக் ட்டுவதற்கு ஆசிரியர் பின் நவீனத்துவம் சார்ந்த மறுவாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஏனெனில் பின் நவீனத்துவ வாசிப்புப் பன்மைத் தன்மையுடையதாய் இருக்கின்றது. அதிகார மையத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பகடி செய்கிறது. திரும்பத் திரும்ப உடைக்கிறது. ஒழுங்கானதைக் கலைத்துப் போடுகிறது. மறு கட்டமைப்புச் செய்கிறது. மறுவாசிப்பிற்கான காரணங்களைப் பின்வருமாறு படைப்பாளர் கூறுகிறார். “நெல் வேளாண்மைத் தொழிலையுடைய தேவேந்திர குல வேளாளர் இனத்தவர் எல்லாக் காலத்திலும் பண்ணை வேலையாட்களாக இருந்தார்களா? இவர்களுக்கென்று தனியான வேளாண் நிலம் இல்ல்‘திருந்ததா? இவர்களை மட்டும் இந்த இலக்கியத்தின் பாடு பொருளாக்கித் தாழ்த்தி வைக்க நினைத்த சமூகக் காரணிகள் என்ன? தமிழக வரலாற்றுடன் மள்ளர்கள் தொடர்புபடுத்தாமலேயே, வெறும் இலக்கிய வாசிப்பாக மட்டுமே, பள்ளு இலக்கியப் பிரதிகள் வாசிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாறக, இவர்களின் வரலாறுகளைக் கல்வெட்டுச் சான்றுகள், பட்டயங்கள், வரலாற்றுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், நாட்டுப்புள வழக்காற்றுச் சான்றுகளில் தேடித் கொகுத்து, இவர்களின் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகம் செய்ய முயல்கிறத. இதனை மள்ளரிய வாசிப்பு அணுகுமுறை என்று புரிந்து கொள்ளலாம். பள்ளு இலக்கியங்கள் இதுவரையிலும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களை விளிம்புநிலை மக்களாகவும், வேளாண் கூலியாகவும் வரலாறுகளைக் கட்டியுள்ளன. பள்ளு இலக்கியங்கள் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கின்றன. இக்காலகட்டமானது தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்த காலமாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்களின் காலத்திலேயே பாளையப்பட்டு முறையின் வாயிலாக மள்ளர்கள் தங்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, பள்ளர்களாக வீழ்த்தப்பட்டார்கள். ஒரு சமூகத்தைத் தனக்குக் கீழான சமூகமாகக் கட்டமைக்கடுகின்றபொழுது கட்டமைக்கின்ற சமூகம் மேலான சமூகமாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. இங்கு மையமாக இருந்த மள்ளர்களை விளிம்பு நிலைக்கு விட்டு, விளிம்பில் இருந்த தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்கள் மைமானார்கள். இந்த வரலாற்று நிகழ்வை நூலாசிரியர் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு தனக்கான வாசிப்பினை நிகழ்த்தியிருக்கிறார்.

ஒரு பிரதி தன்னைத் தானே தகர்த்துக் கொள்கிறது என்ற கூற்றிற்கேற்ப, மள்ளர்களை வரலாறுஅற்றவர்களாக ஒடுக்கி வைப்பதற்காக எழுதப்பட்ட பள்ளு இலக்கியங்களில் மள்ளர்களின் உண்மை வரலாறும் மறைமுகமாகப் பதிவாகியுள்ளது. “மள்ளர்களைப் பள்ளர் என்று அழைப்பதை ஏற்க முறுப்பதை முக்கூடற்பள்ளிர் ஆசிரியரே பதிவு செய்துள்ளார். இதனை,

“பக்கமே தூரப் போயும்
தக்க சோறென் வேளாண்மை
பள்ளா பள்ளா என்பான் மெய்
கொள்ளாதவர்…”

என்ற பாடல் அடிகளின் மூலமாக அறியலாம். பள்ளர் என்பது இவர்களின் வழி வழியான பெயராக இரந்திருந்தால் இப்பெயரால் பிறர் உயர்வு, தாழ்வுகண்டிருக்க மாட்டார்கள். மரபு வழியில் இவர்களுக்கு வேறு பெயர் இருக்க “பள்ளர்” என்பது திடுமெனப் புழக்கத்தில் வரும் போது அதனை எதிர்ப்பது இயல்பாகவே இருந்திருப்பதை முக்கூடற்பள்ளு புலப்படுகிறது. “பன்னிரு பாட்டியல் உழத்திப் பாட்டு” என்னும் சிற்றிலக்கிய வகையையும், அதற்கான இலக்கணத்€த்யும் குறிப்பிடுகிறது. எனவே, அவ்விலக்கணத்தின்படி உழத்திப் பாட்டு என்றும் தனி இலக்கிய வகையே அன்றைய அரசியல் மாற்றத்தால் மறைக்கப்பட்டு, அதற்கு நேர்மாறாக அவர்களைப் பண்ணை வேலையாட்களாகச் சித்தரிக்கும் பள்ளுப் பிரபந்தமாக்கிப் பிரபலப்படுத்தியிருப்பர். 16, 17ஆம் நூற்றாண்டுகளில் சைவ-வைணவ சமயங்களுக்குள் நடந்த சமயப் பூசல்களைப் பதிவு செய்வதற்காகவும், பள்ளு இலக்கியங்களையும், பள்ளு நாடகங்களையும் பயன்படுத்திக் கொண்டார்கள்” என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

மேலும் “நெல் வேளாண்மை குறித்துத் தமிழ் இலக்கியம் முழுவதும் சங்கம் முதல் பள்ளு நூல்கள் வரை மருதநிலத் திணை நில வாழ்க்கையே ஆகும். இந்த மருத நில வேளாண் வாழ்வின் அதாவது, நெல் வேளாண் வாழ்வின் தனித்த இலக்கிய வகையே பள்ளு நூல்கள்” என்கிறார்.

நெல்லுக்கும், தேவேந்திர குல வேளாளர்களுக்குமான உறவுகளைத் தொன்மங்களைக்  கொண்டு புலப்படுத்தி உள்ளார் வரலாற்று அறிஞர் கே.ஆர். அனுமந்தன். “ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெல் வேளாண்€ம்யை விடாமல் செய்து வரும் ஒரே சமூகம் உண்டென்றால் அது பள்ளர்கள்தான்” என்று கூறுவார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு ‘குடும்பன்’ என்ற பெயரும் உண்டு. இதனை நாட்டுப்புறவியல் அறிஞர் தே.லூர்து, “தமிழர்களின் தொன்மத்தை நான் தேடி அலைந்தேன். அத்தொன்மம் தேவேந்திர குல மக்களிடம் காணப்படுவதைக் கண்டு வியந்தேன். இந்த மக்களின் தலைவனாம் வேந்தன் (இந்திரன்) தாந் நீரைக் கண்டு பிடித்தான். நெல்லைப்பூமிக்கு முதன் முதலில் கொண்டு வந்தான். நாகரிகம் கண்டான். அரசைத் தோற்றுவித்தான். இந்த நதிக்கரை நாகரிகத்தில் தாந் ‘குடும்பம்’ தோன்றியது. ‘குடும்பன்’ எனும் சாதிப் பெயர் இவர்களிடம் தானே இருக்கிறது” என்பார்.

இந்திரவிழா எனும் நாற்று நடவுத் திருவிழ மள்ளர்களின் வாழ்வில் நிலைத்து விட்டதைக் கள ஆய்வு செய்து மொழிந்துள்ளார். கோவைமாவட்டம், பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் இந்திர விழ நிகழ்வதைச் சான்றாக்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் மள்ளர் குலத்தில் காணப்படும் மல்ல்‘ண்டை வழிபாட்டினைத் தொல்லியல் ஆய்வு செய்து ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ‘மள்ளர்’ எனும் வரலாற்றுப் பெயருக்கும் ‘பள்ளர்’ எனும் பெயருக்குமிடையேயான வேறுபாடுகளை குறி (Sign), குறிப்பான் (Signifier), குறிப்பீடுகளின் (Signigied) வழி நின்று பின் நவீனத்துவ நோக்கில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

உண்மையான உண்மை என்று எதுவும் இல்லை என்பதைப்போல, எந்த ஒரு பிரதிக்கும் ஒற்றை அர்த்தம் இல்லை. பன்மைத்தன்மையான அர்த்தங்கள் உள்ளன. இது பள்ளு இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேளாண் கூலிகளாக, ஒடுக்கப்பட்டவர்களாக, வரலாறு அற்றவர்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளர்கள், சங்க கால முத்தமிழ் மரபினர், வேந்தன் மரபினர், மருத நிலத்தவர், மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். இந்த வரலாற்று உண்மையைக் கல்வெட்டுச் சான்றுகள், பட்டயச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச் சான்றுகள் ஆகியவற்றைக் கொண்டு ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் ஆகியவற்றின் விளைவாக பூர்வீகக் குடிகளின் இன அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற மீளாய்வுகள் தங்கள் இன அடையாளங்களை மீட்டு கொணர்கின்றன / முன் நிறுத்துகின்றன. பெண்ணியம், மார்க்சியம், மள்ளரியம் போன்றவை சமூக விடுதலைக்கானவை. அந்த வகையில் மள்ளரியம் தமிழ்த் தேச விடுதலைச் சங்கிலியில் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணி செய்து வருகிறார். தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர், மள்ளரியத் தத்துவவியலாளர்.
குறிப்பு

“பள்ளு இலக்கியங்கள் பிறரால் இயற்றப் பட்டதா? அல்லது உழவர், உழத்தியரது வாய்ப்பாட்க்கள் தானா? பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களை இழிவுபடுத்துவதற்காக இயற்றப்பட்டனவா? அல்லத் அவர்தம் பெருமைகளைப் பேணுவதற்காகத் தோற்றம் பெற்றனவா? இவை நாயக்கர் ஆட்சியில் சோற்றுவிக்கப்பட்டனவா? அல்லது தொல்காப்பியம் கூறும் என் வகை வனப்புகளில் ஒன்றான புலன் என்னும் அழகுடைய பாடல்களிலிருந்து தோற்றம் பெற்றதா? என்பது குறித்து மீளாய்வு செய்யப்படல் வேண்டும்”.

Posted in Uncategorized | Leave a comment

ஊழலுக்கு எதிராக செயல்பட்ட உமாசங்கருக்கு கிடைத்த பரிசு தாற்காலிக பணி நீக்கம்- ஜி.ராமகிருஷ்ணன்

தனியார் கேபிள் டிவி நிறுவனத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்த பிறகே உமாசங்கர் பழிவாங்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைக் காப்பாற்ற நினைத்தவருக்கு கிடைத்த பரிசு தாற்காலிக பணி நீக்கம். உத்தபுரம் பிரச்னை முதல் உமாசங்கர் விவகாரம் வரை தலித் விரோத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
- மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.

Posted in Uncategorized | Leave a comment

இரண்டு திராவிடக் கட்சிகளினாலும் பழிவாங்கப்பட்ட உமாசங்கர் ஐஏஎஸ்- தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்காக, திமுக ஆட்சியில் உயர் பதவியில் அமர வைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திமுக அரசாலும் பழிவாங்கப்பட்டுள்ளார். எதிரெதிராக இருக்கிற இரண்டு திராவிடக் கட்சிகளினாலும் பழிவாங்கப்பட்டிருப்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு நேர்மையாகப் பணியாற்றியுள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றார் காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன்.

Posted in Uncategorized | Leave a comment

உமாசங்கர் தாற்காலிக பணி நீக்கம் ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை: நல்லகண்ணு

சிறந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் அமைச்சர்களின் விருப்பத்துக்கிணங்க வளைந்து கொடுக்க மறுத்ததால் பழிவாங்கப்பட்டுள்ளார். இந்த பழிவாங்கும் படலம் ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய எச்சரிக்கை. கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரியாக பணியாற்றியபோது உமாசங்கர் மீது கூறப்படாத குற்றச்சாட்டு, இப்போது கூறப்பட்டிருப்பது ஏன்?
இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு தலித்துகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் தீர்மானம் போடப்பட்டுள்ளது. திமுக பொதுக் குழுவிலும் தீர்மானம் போடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்பை திமுக இப்போது பயன்படுத்தாமல், கிறிஸ்தவரான உமாசங்கர் போலித்தனமாக தலித் சான்றிதழ் வாங்கி விட்டார் என 20 ஆண்டுகளுக்குப் பின் குற்றம்சாட்டுவதை எந்த விதத்தில் நியாயமாக எடுத்துக் கொள்ள முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

Posted in Uncategorized | Comments Off